காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து

0 1147

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காற்றாலை இறக்கையை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இறைவன்காடு காட்டுக்கொல்லை கிராமம் அருகே சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரிக்கு பெட்ரோல் போட,ஓட்டுநர் வாகனத்தை பெட்ரோல் பங்க் நோக்கி திருப்பியபோது, நீட்டிக்கொண்டிருந்த இறக்கை, பின்னால் வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர்.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், காற்றாலை வாகனத்திற்கு வழக்கமாக வரும் Rear Escort வண்டி வராததால் கவனக்குறைவில் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments