பொது விநியோகத்திட்டத்திற்கு உணவு பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களில் ஐ.டி.ரெய்டு

0 1316

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத்திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்டவற்றை விநியோகம் செய்த நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அருணாச்சலம் இம்பேக்ஸ், இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், பெஸ்ட் டால் மில், ஹீரா ட்ரேடர்ஸ், காமாட்சி &கோ, பெஸ்ட் பல்சஸ் அண்டு ஃபுட்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், உரிமையாளர்களின் வீடுகள் என சென்னை உட்பட 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.இதில், அருணாச்சலம் இம்பேக்ஸ், இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் ஆகிய 2 நிறுவனங்கள் கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பொருட்களை விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு பொங்கல் தொகுப்பிற்காக பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுத்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், இது தொடர்பான ஆவணங்களை கிடைக்கப்பெற்று வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments