தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

0 816

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்று, திருவள்ளூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments