பேருந்தின் பின்புறத்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

0 970

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளிலும் பேருந்தின் பின்புற ஏணி கம்பியிலும் தொங்கியபடி பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 

சிதம்பரத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்போது தான் இதுபோன்ற அபாயகரமான  நிகழ்வுகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments