அச்சனே ஆடு சிக்கிரிச்சி அப்படியே அறுத்துடுவோமா ? மயக்கிய பெண் யூடியூப்பர்..! 68 வயது மன்மதருக்கு மொட்டை

0 2478

68 வயதுடைய செல்வந்தருடன் முக நூலில் நட்பாக பழகி காதலித்து மயக்கி, லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் யூ டியூபர், கணவருடன் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளார்.

கேரளா மாநிலம் திருச்சூரை சார்ந்த நிஷாத், ராஷிதா தம்பதியினர் வீட்டில் இருந்தபடியே, பண ஆசையில், யூ டியூபில் வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளனர். ஆனால் இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால், போதிய வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதை அடுத்து முகநூலில் வலம் வரும் வயோதிக செல்வந்தர்களை குறிவைத்து பணம் பறிக்க கணவனும், மனைவியும் பக்காவாக பிளான் செய்துள்ளனர்.

ராஷிதாவின் முகநூல் பக்கத்திலிருந்து வயோதிக செல்வந்தர்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து, வலை விரித்துள்ளனர்.

இதில் மலப்புறம் கல்பாகம்சேரி பகுதியை சார்ந்த 68 வயது செல்வந்தர் சிக்கினார். அவரிடம் ராஷிதா தன்னை ஒரு டிராவல் Vlogger எனக்கூறி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பின்பு முதியவருடன் ஆசையை தூண்டும் வகையில் சாட்டிங் செய்து, நெருங்கி பழகி உள்ளார்.

தனது கணவனின் உதவியுடன், ஆலுவாயில் தாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கே முதியவரை அழைத்துச் சென்று, அவருடன் பலமுறை தனிமையிலும் இருந்துள்ளார். அவருடன் தனிமையில் நெருக்கமாக இருப்பதை, கணவர் பல்வேறு ரகசிய கேமிராக்கள் மூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

முதலில் ராஷிதா தனது கணவனுக்கு ஹோட்டல் தொழில் செய்ய உதவுமாறு கூறி, அவ்வப்போது முதியவரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் முதியவர் தான் ஏமாற்றப்படுவதை அறிந்து பணம் கொடுக்க மறுத்துள்ளார். பின்பு கணவனும் மனைவியும் சேர்ந்து முதியவரை தொடர்பு கொண்டு, தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என்றும், தனது மனைவியின் கர்ப்பத்துக்கு அவர் தான் காரணம் என்றும் மிரட்டி பணம் கறக்க தொடங்கியுள்ளனர்.

ஒரு வருடத்திற்குள் முதியவரிடமிருந்து 23 லட்சம் ரூபாயை பறித்துள்ளனர். அந்த பணத்தில் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி, அதில் குலுமணாலி, லடாக் என இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் சுற்றி -அந்த வீடியோக்களை தங்களது youtube பக்கத்திலும் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோக்களுக்கு பார்வையாளர்களும் அதிகரித்ததை தொடர்ந்து, மேலும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, அவ்வப்போது முதியவரை மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளனர்.

இதற்கிடையே ஆறு மாதத்திற்கு முன்பு ராஷிதாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து தொடர்ந்து பல லட்சம் ரூபாய் குறைவதை கண்காணித்த அவரது வீட்டார், முதியவரிடம் கேட்டபோது நடந்த முழு விவரத்தையும் வீட்டாரிடம் கூறி கதறியுள்ளார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது வீட்டார், மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் youtube தம்பதியினர்களான ராஷிதா, நிஷாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கணவர் நிஷாதை மட்டும் சிறையில் அடைத்துள்ளனர். ஆறு மாத இரண்டு குழந்தைகளை காரணம் காட்டி ராஷிதா நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார்.

பெண் ஆசையால் ஹனி டிராப்பில் முதியவர்கள் சிக்கும் சம்பவங்கள் தொடர்வதால், முக நூல், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் செல்வந்தர்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments