தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்..!

0 1814

தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன் உடல் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வயது முதிர்வு காரணமாக 86 ஆவது வயதில் காலமான அவரது உடல் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து மயிலாப்பூர் கைலாசபுரத்தில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

கவிஞர் வைரமுத்து, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் அவரது உடலை சுமந்துச் சென்றனர்.

அவ்வை நடராசனின் உடலோடு திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments