கண்ணுக்குத் தென்படாத நோயாளியுடன் உரையாடும் மருத்துவமனை பாதுகாவலர்..!

அர்ஜெண்டினாவில், கண்ணுக்குத் தென்படாத நோயாளியுடன் மருத்துவமனை பாதுகாவலர் உரையாடும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
தலைநகர் புயெனொஸ் ஐரெஸில் உள்ள அந்த மருத்துவமனையின் தானியங்கி கதவுகள் அதிகாலை 3 மணியளவில் தானாக திறக்க,
அங்கு அமர்ந்திருந்த பாதுகாவலர் தடுப்பை விலக்கி, கண்களுக்கு தெரியாத நபருடன் பேசிவிட்டு, பின் சக்கர நாற்காலியை எடுத்துவருவதுபோல் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பிராங் வீடியோ வெளியிட பாதுகாவலர் அவ்வாறு நடித்துள்ளதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ள நிலையில், தானியங்கி கதவுகள் எப்படி தானாகத் திறந்தன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Comments