லாரி ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்..!

0 2663

சேலத்தில் லாரி ஓட்டுநரை, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டும் வீடியோ வெளியான நிலையில், அவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

சேலம் தம்மம்பட்டி காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமராஜ், காவலர் சரவணன் ஆகியோர் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டனர்.

அப்போது போலீஸாரின் நடவடிக்கையை வீடியோ எடுத்ததால், லாரி ஓட்டுநரை ஆபாசமான வார்த்தைகளால் எஸ்.ஐ திட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உரிய விளக்கம் கேட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments