ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!

0 1417

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் ஜம்முவின் ஆர்.எஸ் புரா செக்டரில் உள்ள சர்வதேச எல்லை வழியாக பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஒருவர் ஊடுருவ முயற்சித்த போது எல்லை பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்தனர்.

ஆனாலும், அந்த நபர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை நோக்கி வந்ததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments