தாயின் கவனக்குறைவால் குழந்தையின் கால் எலும்பு முறிவு

0 3075

இங்கிலாந்தில் குழந்தையை வைத்து சறுக்கி விளையாடிய தாயின் கவனக்குறைவால் குழந்தையில் கால் எலும்பு முறிந்தது. கிழக்கு லிங்கன்ஷையர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷோனா கீத்லே ((Shona Keetley)) இவர் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அருகில் இருந்த குழந்தைகள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

image

அப்போது சறுக்கி விளையாடும் ஆசையுடன் குழந்தையை தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு சறுக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் கால் மடங்கி எலும்பு முறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை தற்போது நலமாக உள்ளது. குழந்தைகளை வைத்து விளையாடும் போது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்கு கீத்லேவின் செயல் ஒரு பாடமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments