மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி கைது..!

கும்பகோணத்தில் மர்ம நபர்கள் தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய இந்து முன்னணி இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது பெட்ரோல் வாங்க பயன்படுத்தப்பட்ட குளிர்பான பாட்டில் மற்றும் பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட திரி ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தனது பெயர் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் இது போல் செய்ததாக சக்கரபாணி போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Comments