வனவிலங்கு சரணாலயத்தில் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்ட இரண்டு ஆண் யானைகள்..!
தாய்லாந்திலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன.
அரை மணி நேரத்தில், இரு முறை அவை மோதிக்கொண்டதால், அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.
வனத்துறையினர், ஒலிபெருக்கி மூலம் சத்தமிட்டு அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
நவம்பர், டிசம்பர் மாதங்கள் யானைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதால் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments