பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம்.. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி

பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்கள் மீண்டும் பதவிக்காக நடைபயணம் மேற்கொள்வதாக, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி சுரேந்திர நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், பாதயாத்திரையாக செல்பவர்களையும், நர்மதா திட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்களையும், இந்த தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள் என்றார்.
நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 80 சதவீதம் குஜராத்தின் பங்களிப்பு உள்ளதாகவும், அந்த உப்பை உட்கொண்டு சிலர், மாநிலத்திற்கே துரோகம் செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
Comments