3-வது மாடி ஜன்னல் வழியாகத் தொங்கிய குழந்தையை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பக்கத்து வீட்டு நபர்..!
சீனாவில், மூன்றாவது மாடி ஜன்னல் வழியாகத் தொங்கிய பெண் குழந்தையை அண்டை வீட்டுக்காரர், உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.
லியான்-யுன்-காங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அந்த 2 வயது குழந்தை, கீழே மளிகை பொருட்கள் வாங்க சென்ற தாயாரை எட்டி பார்த்தபடியே, ஜன்னல் கம்பிகளைத் தாண்டி, வெளியே வந்தது.
குழந்தையின் அழுகுரல் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர், தனது வீட்டு ஜன்னல் வழியாக வெளியேறி, குழந்தையை நெருங்கினார்.
ஜன்னல் கம்பி வழியாக குழந்தையை வீட்டிற்குள் தள்ள அவர் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததால், அடுத்த 5 நிமிடங்களுக்கு, தாயார் வரும்வரை குழந்தையை பற்றியபடியே இருந்தார்.
Comments