துணைக்கு யாரும் இல்லாததால் கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த அரசு மருத்துவமனை.. வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த மக்கள்

0 2767

துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கர்ப்பிணி பெண் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் அந்தப் பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அருகிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலையில் விழுந்து துடித்த பெண்ணை பார்த்த சிலர் போர்வைகளை வைத்து மறைப்பு ஏற்படுத்தி பிரசவம் பார்த்துள்ளனர்.

அரசு விதித்துள்ள நிபந்தனைபடியே நாங்கள் செயல்பட்டோம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments