மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு..!

0 5773

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். 

பாஷியம்ரெட்டி தெருவில் உள்ள தனியார் காது மூக்கு மருத்துவமனையில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராஜ்  அனுமதிக்கப்பட்டார்.   

அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் மயக்க மருந்து செலுத்தியவுடன் சுயநினைவை இழந்தது மட்டுமின்றி உடல்நிலையும் மோசமாகியுள்ளது.

இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அங்கிருந்தோர் கூறவே, அவரை குடும்பத்தினர் அழைத்து சென்றபோது உயிரிழந்தார். 

கோவிந்தராஜுக்கு தவறான சிகிச்சை அளித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து பதற்றம் நிலவவே, அந்த  மருத்துவமனை முன்பு  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments