வீட்டு வாசலில் நிற்கவைக்கப்பட்டு இருந்த காரின் மீது திடீரென முறிந்து விழுந்த மரம்..!

0 2595

சென்னை அபிராமிபுரம் பாபா சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பலத்த சேதமடைந்தது.

பத்மா என்பவர் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.. இரவு 10 மணியளவில் சத்தம் வரவே வெளியே வந்து பார்த்தபோது, கார் மீது மரம்  விழுந்து கிடந்தது.

அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து வந்த  அபிராமிபுரம் காவல் துறையினர், தேனாம்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments