நிலக்கரி திருட முயன்ற கும்பலுக்கும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூடு..!

ஜார்கண்டில், நிலக்கரி திருட முயன்ற கும்பலுக்கும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தன்பத் மாவட்டத்திலுள்ள Denidih பகுதியில் இருந்து நிலக்கரி கடத்த முயற்சித்த கும்பலை, பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் தடுத்துள்ளனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் மீது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
Comments