தன்னை சிறப்பு வழியில் அனுமதிக்க கோரி பாதுகாப்பு ஊழியரிடம் வழக்கறிஞர் தகராறு..!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்திற்கு சிறப்பு வழியில் அனுமதிக்க கோரி பாக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஏற்பட்ட தகராறில் பாதுகாப்பு ஊழியரும், பக்தரும் மாறி மாறி தாக்கிக் கொண்டது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்பிரசாத் நேற்று மாலை தனது தாயாருடன் கோயிலுக்கு சென்றிருந்த போது, அங்கு பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு ஊழியரிடம் தன் அடையாள அட்டையை காண்பித்து, தன்னை சிறப்பு வழியில் அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.
சிறப்பு வழியில் செல்ல டிக்கெட் பெற வேண்டும் என கூறிய ஊழியர், அவரை அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ராம்பிரசாத் தாக்கியதை அடுத்து பாதுகாப்பு ஊழியரும் பதில் தாக்குதல் நடத்தினார்.
Comments