வீட்டை தன் பெயருக்கு எழுதி கொடுக்காததால் பெற்ற தாயை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மகன்..!

சென்னை மதுரவாயலில், சொத்து தகராறில் தாயாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
80 வயது மூதாட்டியான சரோஜா, தனது மகன் கபாலிக்கும், நான்கு மகள்களுக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
முன்பு துபாயில் வேலை பார்த்துவந்த கபாலி தற்போது எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாகவும், அவரது தாயார் வசித்துவரும் வீட்டையும் தன் பெயருக்கு எழுதி தரச்சொல்லி வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காலை தாய் - மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கபாலி ஆத்திரத்தில் அங்கிருந்த அரிவாளை எடுத்து சரோஜாவின் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments