பார்வை மாற்றுத்திறனாளியான 55 வயது முதியவர் முதல் முயற்சியிலேயே குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை..!
தஞ்சை மாவட்டம் ஆழி வாய்க்கால் கிராமத்தில் பார்வை மாற்றுத்திறனாளியான முதியவர் ஒருவர் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கொண்டே, செவி வழியில் படித்து, முதல் முயற்சியிலேயே குருப்-2 பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
55 வயதான ரவிச்சந்திரன், கணித பட்டப் படிப்பு முடித்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியான இவர், தன் கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் குரூப் 2 தேர்வு எழுத முடிவு செய்த இவர், கோச்சிங் சென்டர் சென்று படிக்க வசதி இல்லாததால், தேர்வுக்கான புத்தகங்களை வாங்கி, மூதாட்டி ஒருவரை படிக்கச் சொல்லி அதனை செவி வழியில் கேட்டு மனப்பாடம் செய்துள்ளார்.
குருப் 2 பிரிலிமினரி தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த அவருக்கு இன்ப அதிர்ச்சியாக தேர்வில் தேர்ச்சி என்ற முடிவு வெளி வந்தது.
தொடர்ந்து அடுத்து நடக்கவுள்ள மெயின் தேர்வுக்கு தயாராகி வரும் ரவிச்சந்திரனின் முயற்சிக்கு ஒட்டு மொத்த கிராம மக்களும் துணை நிற்கின்றனர்.
Comments