ரஷ்யாவில் 5 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து... 9 பேர் உயிரிழப்பு

0 2711

ரஷ்யாவில் ஐந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

பசிபிக் தீவான சகலின் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சரிந்து விழுந்தது. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.

பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments