குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி 3 நாள் பிரச்சாரம் தொடக்கம்

0 3215

சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி  குஜராத்தில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களில் அவர் பல்வேறு மாவட்டங்களில் எட்டு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

நேற்று வலசாத் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குஜராத்தை குறை கூறியவர்களுக்கு ஆட்சியில் இடம் இல்லை என்று வாக்காளர்களுக்கு வலியுறுத்தி பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார். சாலையில் பேரணியாக சென்ற மோடிக்கு மக்கள் பெரும் திரளாக வந்து ஆதரவை வெளிப்படுத்தினர்.

அப்போது 13 வயதுசிறுமி ஒருவர் மோடியின் சித்திரத்தை கையில் வைத்திருந்ததை கவனித்த பிரதமர் மோடி உதவியாளர்களை அனுப்பி அமி பாட்டூ என்ற அந்த சிறுமியை அழைத்து அவரிடமிருந்து அந்த ஓவியத்தைப் பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments