மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் திடீரென வெடிவிபத்து..!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் சாலையில் சென்ற ஆட்டோவில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்கனடி என்ற பகுதியில் சனிக்கிழமையன்று மாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த பயணியும், ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே எதுவும் முடிவுக்கு வர முடியாது என தெரிவித்த காவல்துறையினர், மக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், பீதியடையாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஆட்டோவில் பயணித்தவரின் பையை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments