ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் மணிகா பத்ரா..!

0 3022

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்  போட்டியில், இந்தியாவின் மணிகா பத்ரா வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

பாங்காக்கில் நடைபெற்ற  வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், உலகின் 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாதாவை, மணிகா பத்ரா எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 4-க்கு 2 என்ற செட் கணக்கில் மணிகா பத்ரா வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம், ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மணிகா பத்ரா பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments