தூங்குவது போல நடித்த 2 பேரிடம் நடத்திய சோதனையில் 2 உலோக சாமி சிலைகள் மீட்பு..!

0 3380

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்குவது போல நடித்த 2 பேரிடம் சோதனை நடத்தி, 2 உலோக சாமி சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.   

சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீசார் விசாரித்தபோது,  திடீரென ஒருவர் தப்பியோடினார். 

இதையடுத்து இன்னொரு நபரிடம் சோதனை நடத்தியதில் 2 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.   

பிடிபட்ட நபர் தஞ்சாவூரை  சேர்ந்த சுதாகர்  என்பதும், தப்பியோடியவர் கும்பகோணத்தைச் சேர்ந்த தினேஷ்   என்பதும் ,  லால்குடி பெண் ஒருவர் சிலைகளை கொடுத்து,  சென்னையில் உள்ள ஒரு நபரிடம் அளித்து 3 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments