அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வருகை..!

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த நிலையில், அமெரிக்காவின் அதிநவீன குண்டுவீச்சு போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு வந்துள்ளன.
2வது நாளாக நேற்று வடகொரியா ஏவுகணையை பரிசோதித்தது. அந்த ஏவுகணை 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதென்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் B-1B ரக குண்டுவீச்சு போர் விமானங்கள், தென் கொரியா வந்துள்ளன.
கூட்டு பயிற்சிக்காக அந்த விமானங்கள் வந்துள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
Comments