வீட்டு கொட்டாயில் தங்கியுள்ள உறவுக்கார முதியவருக்கு உணவு தர மறுத்ததோடு, கம்பால் அடித்து துன்புறுத்தல்..!

0 2382

செங்கல்பட்டு அருகே வீட்டு கொட்டகையில் தங்கியிருந்த உறவுக்கார முதியவர் அடித்து துன்புறுத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

குப்பன் என்பவரின் வீட்டு கொட்டாயில்   உறவுக்காரரான  80 வயதாகும் சொக்கலிங்கம் தங்கியுள்ளார்.

கவனிக்க யாருமில்லாத அவரை, குப்பனும் அவரது மகள் சிவகாமி மற்றும் பேரன் சூரியாவும் உணவு தரமறுத்ததோடு,குச்சி மற்றும் கம்பால் அடித்துள்ளனர். 

இதில் காயமடைந்த சொக்கலிங்கம் காயங்களுடன் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து விசாரணை நடத்தி சூர்யாவை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments