சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1954
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் 21ஆம் தேதியன்று விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும், 22ஆம் தேதியன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments