மத்திய அரசுக்கு சொந்தமான அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து.. 2 பேர் லேசான காயம்

0 1995
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

காலை 8 மணியளவில் சி.டி செக்சனில் 8 பேர், வேதி பொருட்களை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த இயந்திரம் வெடித்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறிய நிலையில், 2 பேர் லேசான காயமடைந்தனர்.

பலத்த சத்ததால் 3 பேரின் காது பாதிக்கப்பட்டு ஊட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments