டிராக்டர் வாகனங்களைத் தொடர்ந்து திருடிவந்தவர்கள் கைது.. 6 வாகனங்கள் பறிமுதல்!

0 2361

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டிராக்டர் வாகனங்களை தொடர்ந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமயசங்கிலி, ஜீவா நகர் பகுதிகளில் டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே டிராக்டரில் வந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் மணிகண்டன் என்பதும், டிராக்டர் வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டதும் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 6 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments