சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
கடத்தி சென்று கட்டாய திருமணம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. 17 வயது சிறுமி விபரீத முடிவு..

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பக்கத்து வீட்டு இளைஞர் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து, ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கட்டாய திருமணம் செய்த மணிகண்டன், அவரது பெற்றோர் மற்றும் உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சிறுமியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்ய எடுத்துச்சென்றனர்.
Comments