கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரம்: 2 மருத்துவர்கள் ஜாமீன்கோரி மனு

0 3203

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கை, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் இருந்து அலட்சியத்தினால் மரணம் என்ற பிரிவுக்கு மாற்றி, பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று சமர்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்த பிரிவுகளில் மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், செல்போன் சிக்னலை டிராக் செய்து தலைமறைவாக உள்ள மருத்துவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களது முன் ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments