பாலஸ்தீனத்தின் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் பலி..!

0 2106

பாலஸ்தீனத்தின் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.

ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவி கட்டிடம் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது.

கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பயங்கர தீ விபத்தி சிக்கி 21 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments