ஸ்கேன் கருவியில் தீப்பிடித்ததால் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!

கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள சி,டி. ஸ்கேன் கருவியில் திடீரென தீப்பிடித்து பரவியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ வேகமாகப் பரவியதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. நோயாளிகள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதாறு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை சேவைப்பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக மாநில அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
Comments