இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்', ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது..!

0 3275

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்', ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள இந்த ராக்கெட், இன்று காலை 11 மணியளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் - ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய 3 செயற்கை கோள்களை சுமந்து செல்லும்.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி 'விக்ரம் சாராபாய்' நினைவாக 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments