வீட்டில் போலி மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர் கைது..!

0 3344

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே வீட்டில் போலி மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர்  கைது செய்யப்பட்டார். 

ராமநத்தத்தைஅடுத்துள்ளஆவட்டி பகுதிகளில் போலி  மருத்துவர் நடமாடுவதாக வந்த  தகவலை அடுத்து அப்பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது புடையூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்  என்பவர் வீட்டில் எவ்வித அரசு அனுமதி இன்றி போலி மருத்துவமனை நடத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் அங்கிருந்து மாத்திரைகள் ஊசிகள் குளுக்கோஸ் பாட்டில்கள் சிரஞ்சீகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments