பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர், சோப்பு திரவம் தயாரித்து வந்த 15பேர் கைது..!

0 3054

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து போலி வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டது.

எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் சோதனை மேற்கொண்டனர். அ

ப்போது அங்கு பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக வாஷிங் பவுடர் மற்றும் சோப்பு திரவம் தயாரித்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து 500மூட்டை சோப்பு பவுடர், 50கேன் சோப்பு திரவம், 6பேக்கிங் இயந்திரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக  மேனேஜர், சூப்பர்வைசர் உள்பட 15பேர் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments