சாலையோர லாரிகள் நிறுத்துமிடத்தில் காரில் சென்று டீசல் திருடும் கும்பல்..!

0 5275

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தில் உள்ள சாலையோர லாரிகள்  நிறுத்துமிடத்தில் காரில் வந்த கேனில் டீசல் திருடிச்செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தில் சாலையோர உணவகத்துடன் கூடிய ஓய்விடத்தில் நிறுத்தப்படும் லாரிகளில் டீசல் திருட்டு தொடர்ச்சியாக அரங்கேறியதால் அங்கு சிசிடிவி பொறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மாருதி சுசுகி டிசையர் காரில் வந்து டீசல் திருடிச்செல்லும் கும்பலின் கைவரிசை அங்குள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளது.

முழுசாக 3 நிமிடத்திற்குள்ளாக 3 கேன்களில் 75 லிட்டர் டீசலை லாரியின் டீசல் டேங்கில் இருந்து குழாய் மூலம் உறிஞ்சி கேன்களில் நிரப்பி, அந்த கேன்களை கார் டிக்கியில் மறைத்து எடுத்துச்சென்றுள்ளனர்.

இந்த டீசல் திருட்டுக் கும்பலை பிடிக்க சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments