அமெரிக்கா - திருமணத்திற்கு மணமகனை சவப்பெட்டியில் வைத்து தூக்கி வந்த நண்பர்கள்..!

0 14267

அமெரிக்காவில், தனது திருமணத்திற்கு சவப்பெட்டியில் மணமகன் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முறையில் பல பேர் திருமணம் செய்துகொள்ளும் நிலையில், விநோதமான முறையில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு வந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

சவப்பெட்டியினுள் மணமகனை வைத்து அவரது நண்பர்கள், திருமணம் நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்த போது, அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், சவப்பெட்டியை திறந்து மணமகன் வெளியே வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments