பிறந்து நான்கே நாட்கள் ஆன ஆண் குழந்தை தவறான ஊசியால் இறந்ததாக புகார்..!

0 3610

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்த நவநீதன் என்பவரின் மனைவி சரிதாவிற்கு கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த திங்கட் கிழமை அன்று குழந்தை பிறந்துள்ளது.

புதன்கிழமை அன்று அம்மை தடுப்பூசி போட்ட நிலையில், வியாழக்கிழமை காலை பால் குடித்த குழந்தை உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்

குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், அம்மை தடுப்பூசிக்கும் குழந்தை இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்றும் சங்கு மூலமாக பால் கொடுத்ததால் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்ததாக விளக்கமளித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments