காலாவதியான சாக்லேட் சாப்பிட்டதால் தொடக்கப்பள்ளியில் 24 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..!

0 3384

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காலாவதியான சாக்லேட் சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சயனபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 4ம் வகுப்பு மாணவன் பிறந்தநாளையொட்டி, வகுப்பிலுள்ள சக மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்துள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், உடனடியாக புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

பள்ளிக்கு வந்த மருத்துவர்கள், மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  விசாரணையில் காலாவதியான சாக்லேட்டை உண்டதால் மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்ததால், காலாவதியான சாக்லேட் விற்பனை குறித்து நெமிலி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments