பூமியின் புகைப்படத்தை அனுப்பிய ஆர்டிமிஸ் 1 ராக்கெட்..!

0 15074

நிலவை ஆராய, ஆர்டிமிஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஓரியன் விண்கலம், பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

நேற்று அதிகாலை சக்திவாய்ந்த ஆர்டிமிஸ் 1 ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. 9 மணி நேர பயணத்திற்கு பின், சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து பூமியை புகைப்படம் எடுத்து ஓரியன் விண்கலம் அனுப்பிய நிலையில், 1972-ம் ஆண்டுக்கு பின், நிலவுக்கு செல்லும் விண்கலம் ஒன்று பூமியை புகைப்படம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு, காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. வரும் நவம்பர் 21 மற்றும் 25-ம் தேதி, நிலவின் மேற்பரப்புக்கு அருகில், சுமார் 60 மைல் தொலைவில் செல்லும் ஓரியன் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி பூமிக்கு திரும்பவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments