மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அரிவாள்மனையால் மைத்துனரை வெட்டிய கொடூரம்..!

0 2186

மனைவியின் தம்பியை வெட்டிக் கொன்றுவிட்டு, நாடகமாடியவரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கிண்டி அடுத்த மடுவங்கரையை சேர்ந்த செல்வகுமாரின் மனைவி செல்வி இரு குழந்தைகளையும் கணவரையும்  தவிக்க விட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மனைவியின் சகோதரர் நாகராஜுடன் சேர்ந்து மது அருந்திய செல்வக்குமார், மனைவி ஓடி போனதற்கு நியாயம் கேட்டுள்ளார்.

இதில் உண்டான தகராறில் நாகராஜை வெட்டி கொலை செய்த செல்வக்குமார், போலீசாரிடம் சென்று மர்ம நபர்கள் கொலை செய்ததாக  நாடகமாடினார்

விசாரணையின் இறுதியில் செல்வக்குமார், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments