குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு..!

0 3687

ஈரானின் தென்மேற்கு குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

Izeh நகரின் பரபரப்பான சந்தையில் நுழைந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் ஏற்கனவே ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் சூழலில், தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments