உக்ரைன் போரில் அப்பாவி மக்கள் தாக்கப்படுவது குறித்து ஐநா.விடம் இந்தியா முறையீடு..!

0 2521

உக்ரைன் போரில், தொடர்ந்து அப்பாவி மக்கள் மீதும் அவர்கள் குடியிருப்புகள் மீதும் தாக்கப்படும் நிலைமை குறித்து ஐநா.விடம் இந்தியா முறையிட்டுள்ளது.

நியுயார்க்கில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், ரஷ்யா- உக்ரைன் போரால் ஐரோப்பா மட்டுமின்றி உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

அமைதிக்கும் பேச்சுவார்த்தைக்கும் இடம் கொடுக்குமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.கோவிட் தொற்றுக்குப் பிறகு, போரால் உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments