மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது

0 9153

சென்னையில், மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்த ஜோசப் இளங்கோ என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், தனது மகளுக்கு , செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடம் வாங்கித் தருவதாகக் கூறி வளசரவாக்கத்தைச் சேர்ந்த சசிகலா மற்றும் ரம்யா ஆகியோர் பல தவணைகளாக 90 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல், மேலும் பலரிடம் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சசிகலா மற்றும் ரம்யா ஆகியோரைக் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments