கிரிக்கெட் மூலம் நண்பர்களாக பழகி அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி..!

0 3792

திருச்சியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய்  மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். 

பாலக்கரையில் தன்னுடன் கிரிக்கெட் விளையாடவரும் நண்பர்களுடன் நெருக்கமாகப் பழகிய கார்த்திக் என்பவர், 10லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி 30க்கும் மேற்பட்டோர் முதல்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் வீதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக கார்த்திக்கை தொடர்பு கொள்ள முடியாத அவர்கள், பணத்தை மீட்டுத் தரக் கோரி காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments