ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணி அளவில் ஆன்லைனில் வெளியீடு..!

0 2433

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட இன்று காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.

டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் w.w.w tirupatibalaji.ap.gov.in வெப்சைட் மூலம் அவற்றை முன் பதிவு செய்து கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments