ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து..!

0 4364

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வேன் 30 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

கோம்பு பள்ளம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை இறக்கிவிட்டு, வேன் பள்ளிக்கு திரும்பிக்கொண்டிருந்தது.

இக்கரை நெகமம் புதூர் பகுதியில் சென்றபோது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த வேன், பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். வேனில் பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments